/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் தரைப்பால மாற்றுப்பாதை சேதம் சத்தரையில் போக்குவரத்து பாதிப்பு
/
கூவம் தரைப்பால மாற்றுப்பாதை சேதம் சத்தரையில் போக்குவரத்து பாதிப்பு
கூவம் தரைப்பால மாற்றுப்பாதை சேதம் சத்தரையில் போக்குவரத்து பாதிப்பு
கூவம் தரைப்பால மாற்றுப்பாதை சேதம் சத்தரையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 12, 2025 01:26 AM

கடம்பத்துார்:ச த்தரை பகுதியில் சீரமைக்கப்பட்டு வரும் கூவம் ஆற்று தரைப்பாலத்தில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை, வெள்ளநீரால் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியத்தில் சத்தரை ஊராட்சி அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் -- கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம், கடந்த 2016, 2021, 2022, 2023, 2024 என, ஐந்து முறை சேதமடைந்தது.
தற்போது, அரசு உத்தரவுப்படி, 14 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த ஜூன் மாதம் துவங்கி நடந்து வருகிறது.
இந்த மேம்பாலம், 150 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில், 13 துாண்களுடன் அமையவுள்ளது. மேம்பால பணிகளுக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வந்தன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் ந ள்ளிரவு, சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை வெள்ளநீரால் சேதமடைந்தது.
இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.