ADDED : ஜன 11, 2025 02:06 AM

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் ஈக்காடு அருகில் சேதமடைந்துள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆற்று நீர் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்த்கே்கத்திற்கு தண்ணீர் வருகிறது.
இங்கு சேகரமாகும் தண்ணீரை புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பூண்டியில் இருந்து புழல் ஏரி வரை அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஈக்காடு அருகில் சேதமடைந்து உள்ளது.
கால்வாயில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் உடைந்துள்ளன. இதன் காரணமாக, சென்னைக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர், விரயமாகி வருகிறது.
எனவே, பொதுப்பணி - நீர்வள ஆதாரத் துறையினர் உடைந்த கால்வாய் பகுதியை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

