/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எளாவூர் சோதனைச்சாவடியில் சேதமடைந்த அலுவலக கட்டடம்
/
எளாவூர் சோதனைச்சாவடியில் சேதமடைந்த அலுவலக கட்டடம்
ADDED : ஜன 15, 2025 11:40 PM

கும்மிடிப்பூண்டி, சென்னை --  கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், 2018ம் ஆண்டு ஜூன் மாதம், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது. அங்கு, போக்குவரத்து துறை, வனத்துறை, போலீசார் வாகன தணிக்கை மற்றும் சோதனை செய்து வருகின்றனர்.
போக்குவரத்து துறையின் பராமரிப்பில் அந்த சோதனைச்சாவடி கட்டடங்கள் உள்ளன.
அங்கு, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் திசையில் உள்ள சோதனைச்சாவடி கட்டட சுவர் பழுதாகி, உள்ளிருக்கும் செங்கல் தெரியும் அளவிற்கு கான்கிரீட் பெயர்ந்துஉள்ளது.
மேலும், பல இடங்களில் சுவரில் விரிசல் கண்டு ஆபத்தான நிலையில் உள்ளன. திறக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் கட்டடம் பழுதாகி இருப்பதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால் கட்டடம் பலவீனமாகி சிதிலமடையும் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. போக்குவரத்து துறையினர் துரிதமாக செயல்பட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

