/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர இறைச்சி கடைகள் முன் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்
/
சாலையோர இறைச்சி கடைகள் முன் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்
சாலையோர இறைச்சி கடைகள் முன் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்
சாலையோர இறைச்சி கடைகள் முன் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்
ADDED : ஏப் 07, 2025 11:52 PM

திருவாலங்காடு, திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருவாலங்காடு சாலையோரங்களில், இறைச்சி கடைகள் புற்றீசல் போல தோன்றியதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
திருவாலங்காடு தேரடி முதல் சர்க்கரை ஆலை நான்கு ரோடு வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 100க்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள் அமைக்கப்படுகின்றன.
இங்கு திருவாலங்காடு, வீரராகவபுரம், சின்னம்மாபேட்டை, கணேசபுரம், வேணுகோபாலபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறைச்சி பிரியர்கள் வந்து செல்கின்றனர்.
சந்தை கூடம் இல்லாததால், இறைச்சி வியாபாரிகள் நெடுஞ்சாலையோரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாரந்தோறும் இதே நிலை நீடிப்பதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, திருவாலங்காடில் இறைச்சி கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.