/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை எதிரே விபத்து அபாயம்
/
பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை எதிரே விபத்து அபாயம்
பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை எதிரே விபத்து அபாயம்
பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை எதிரே விபத்து அபாயம்
ADDED : நவ 25, 2024 02:36 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை, பள்ளிப்பட்டு நகரில் இருந்து நகரி செல்லும் சாலையில், கோனேட்டம்பேட்டை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தினரும் வந்து பல்வேறு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.
பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் பேருந்து மற்றும் பயணியர் ஆட்டோக்களில் பகுதிவாசிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை எதிரே சாலையின் குறுக்கே நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது. இதற்கான பாலத்திற்கு தடுப்பு சுவர் சமீபத்தில் விபத்து ஒன்றில் இடிந்து விழுந்தது.
மேலும் தார் சாலையை ஒட்டியுள்ள கால்வாயும் புதரில் மறைந்து கிடக்கிறது. இதனால், சாலையோரம் யாரும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினால் பள்ளத்தில் கவிழும் அபாய நிலை உள்ளது.
மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பாலத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும், திறந்த நிலையில் உள்ள கால்வாயை கான்கிரீட் தளம் அமைத்து பாதுகாக்கவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.