/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செத்து மடியும் காகங்கள் பள்ளிப்பட்டில் அதிர்ச்சி
/
செத்து மடியும் காகங்கள் பள்ளிப்பட்டில் அதிர்ச்சி
செத்து மடியும் காகங்கள் பள்ளிப்பட்டில் அதிர்ச்சி
செத்து மடியும் காகங்கள் பள்ளிப்பட்டில் அதிர்ச்சி
ADDED : ஜன 21, 2026 06:49 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தொடர்ந்து செத்து மடியும் காகங்களால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இப்பகுதியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றாங்கால் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மரங்களில், ஏராளமான பறவைகள் கூடு கட்டியுள்ளன. இதில் காகங்களும் உள்ளன.
இரண்டு நாட்களாக, இங்குள்ள மரங்களில் வசிக்கும் காகங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றன. மரங்களில் இருந்து மயங்கிய நிலையில் கீழே விழும் காகங்கள், அடுத்த சில நிமிடங்களில் உயிரிழக்கின்றன. இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெளியில் பறந்து செல்லும் காகங்கள், ஒவ்வாத உணவு பொருட்களை சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

