ADDED : பிப் 08, 2024 11:59 PM
அ நிறம் | அளவு
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் குமாரவேல் என்பவர் இளநிலை பொறியாளராக பணபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 4ம் தேதி புன்னம்பாக்கம் கிராமத்தில் லைன்மேன் ஜெயப்பிரகாஷ், மின்பாதை ஆய்வாளர் ஏழுமலை ஆகியோருடன் அப்பகுதியில் மின்கட்டணம் செலுத்தாமல் இருந்த நரேந்திரன் என்பவரது வீட்டில் மின் இணைப்பை துண்டிப்பு செய்தார்.
அப்போது நரேந்திரன் மின்வாரிய ஊழியர்களை ஆபாசமாக பேசி ஏழுமலையை உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார்
இதுகுறித்து குமாரவேல் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
