/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படியில் பயணித்த மாணவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
/
படியில் பயணித்த மாணவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
படியில் பயணித்த மாணவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
படியில் பயணித்த மாணவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
ADDED : அக் 15, 2024 08:36 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், சோளிங்கர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
இவர், கடந்த 10ம் தேதி மாலை பள்ளியில் இருந்து அரசு பேருந்து தடம் எண்: டி 73ல் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வீராணத்துார் பேருந்து நிறுத்தம் வந்த போது, அந்த மாணவர், பேருந்து படியில் நின்று கொண்டிருந்ததால், அங்கிருந்த சிலர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி, அடித்துள்ளனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்படி ஆர்,கே,பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக, அய்யனேரியை சேரந்த லித்திப், 21, கார்த்திக், 18, ஞானகொல்லிதோப்பு கிராமத்தை சேர்ந்த அருண்குமார், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அய்யனேரியை சேர்ந்த அருண்குமார், 22, என்பவரை தேடிவருகின்றனர்.