ADDED : பிப் 22, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்,:சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்ராஜ் மனைவி செரில்தீபா, 39. இவர் கடந்த 19ம் தேதி மப்பேடு அடுத்த கொட்டையூர் கிராமத்தில், கண்ணுார் செல்லும் சாலையில் உள்ள தன் நிலத்தில் வேலையாட்களுடன் வேலி அமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், செல்வராஜ் , கற்பகம், எல்லம்மாள் ஆகியோர் நிலப் பிரச்சனை காரணமாக தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து செரில்தீபா கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.