/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 50 ஆண்டுக்கு பின் காந்தி சிலை இடமாற்ற முடிவு
/
திருத்தணியில் 50 ஆண்டுக்கு பின் காந்தி சிலை இடமாற்ற முடிவு
திருத்தணியில் 50 ஆண்டுக்கு பின் காந்தி சிலை இடமாற்ற முடிவு
திருத்தணியில் 50 ஆண்டுக்கு பின் காந்தி சிலை இடமாற்ற முடிவு
ADDED : நவ 20, 2024 01:53 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில், காமராஜர் மார்க்கெட் எதிரில் மஹாத்மா காந்தியின் சிலை, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அரசியல் கட்சி சார்பில், 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. பின், அதற்கு மண்டபம் மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டன.
சுதந்திர தினம், குடியரசு தினம், முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அவ்வப்போது காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம்.
இந்த காந்தி சிலை போக்குவரத்து இடையூறாக உள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து நகராட்சி நிர்வாகம், காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு, வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நேற்று, அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, ஆணையர் பாலசுப்பிரமணியம், துணை சேர்மன் சாமிராஜ் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், காந்தி சிலை இடமாற்றம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
மேலும், காந்தி சிலை புதிய அல்லது பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் வளாகம் ஆகிய மூன்று இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் வைக்கப்படும். இதற்காக, மக்களிடம் கருத்துகேட்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.