ADDED : ஜூன் 22, 2025 07:51 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராமத்தில், 2018 - -19ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த குடிநீர் இயந்திரம் வாயிலாக, ஒரு நாளைக்கு, 2,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளாக இயந்திரம் பழுதாகியும், போதிய பராமரிப்பின்றியும் உள்ளது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அறை முழுதும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், அரசு பணம் வீணாவதுடன், நெமிலி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் குடிநீர் இயந்திரத்தை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
