/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடைகள் திறப்பதில் காலதாமதம் பொருட்கள் வாங்குவதில் பகுதிவாசிகள் அவதி
/
ரேஷன் கடைகள் திறப்பதில் காலதாமதம் பொருட்கள் வாங்குவதில் பகுதிவாசிகள் அவதி
ரேஷன் கடைகள் திறப்பதில் காலதாமதம் பொருட்கள் வாங்குவதில் பகுதிவாசிகள் அவதி
ரேஷன் கடைகள் திறப்பதில் காலதாமதம் பொருட்கள் வாங்குவதில் பகுதிவாசிகள் அவதி
ADDED : டிச 26, 2024 09:33 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளில் 70 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தலா ஒரு விற்பனையாளர், எடையாளர் என 140 பேர் பணியாற்ற வேண்டும்.
ஆனால், 45 விற்பனையாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். எடையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், விற்பனையாளரே அப்பணியையும் சேர்த்து கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல கிராமப் பகுதிகளில் நியாய விலைக் கடைகள் திறப்பில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் கடைகள் திறப்பது எப்போது என்பது என, தெரியாமல் பகுதிவாசிகள் பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு விற்பனையாளர், ஐந்து கடைகள் வரை கவனிப்பதே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு ஊழியர் பற்றாக்குறையால் நியாய விலைக் கடைகள் காலதாமதம் ஏற்படுவதால், பகுதிவாசிகள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் பகுதிவாசிகள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலை ஏற்படுகிறது. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நியாய விலை கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாளர்களை நியமித்து, பொருட்கள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

