/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் பூமிக்கடியில் கழிவுநீர் குழாய் பதிப்பு பணியில் தொய்வு
/
ஆரணி ஆற்றில் பூமிக்கடியில் கழிவுநீர் குழாய் பதிப்பு பணியில் தொய்வு
ஆரணி ஆற்றில் பூமிக்கடியில் கழிவுநீர் குழாய் பதிப்பு பணியில் தொய்வு
ஆரணி ஆற்றில் பூமிக்கடியில் கழிவுநீர் குழாய் பதிப்பு பணியில் தொய்வு
ADDED : ஏப் 28, 2025 11:37 PM

பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், முதல்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், 22 வார்டுகளில், 41கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
தெருக்களில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், ‛மேன்ஓல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றன.
வேண்பாக்கம், பழைய பேருந்துநிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு கீழ்நிலை தொட்டிகளும் அமைக்கப்பட்டு நிலையில் உள்ளன.
குடியிருப்புகளில் இருந்த சேகரிப்பு தொட்டிகளுக்கு வந்தடையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்ல ஆரணி ஆற்றின் குறுக்கே, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, 'ஹரிசாண்டல் புல்லிங்' முறையில் பூமிக்கடியில், குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக திருவாயற்பாடி - சின்னகாவணம் இடையே ஆற்றில் பூமிக்கடியில், 12 மீ ஆழத்தில் துளையிடும் பணிகள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை நடைபெற்றன.
இயந்திரத்தின் உதவியுடன் ஆற்றின், பூமிக்கடியில், 250மீ. துாரத்திற்கு, 'ஹரிசாண்டல் புல்லிங்' முறையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், ஆறு அங்கல விட்டத்தில் துளையிட  துவங்கி, அது, 10, 18, 22, 40, 44 அங்குலம் என படிப்படியாக விட்டத்தின் அளவு அதிகரிகப்பட்டன.
துளையிடும் பணிகள் முடிந்த பின், ராட்சத இரும்பு குழாயை, திருவாயற்பாடியில் இருந்து சின்னகாவணம் பகுதிக்கு தயராக இருந்த துளையின் வழியாக 'புல்லிங்' செய்யப்பட்டது.
இது சிறிது சிறிதாக 'புல்லிங்' செய்ய்யப்பட்டு, சின்னகாவணம் கரைக்கு அருகில் செல்லும்போது, 'புல்லிங்' இயந்திரத்தில் இருந்து, ராட்சத குழாய் இணைப்பு துண்டானது.
இதனால் ராட்சத குழாய் சின்னகாவணம் கரையை அடையாமல், 40மீட்டர் முன்னரே பூமிக்கடியில் நின்று போனது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஆற்றிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
கழிவுநீர் செல்வதற்கான இரும்பு ராட்சத குழாய், பூமிக்கடியில் துண்டாகி நின்றதால், பாதாள  சாக்கடை திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
எஞ்சிய பணிகளை மேற்கொள்வதற்காக ஆற்றின் ஒருபகுதியில் பள்ளம் தோண்டி, மண் சரிவை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அப்போது தண்ணீர் தேங்குவதால், அடுத்தகட்டபணிகளை மேற்கொள்ள முடியாமல் திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஆற்றில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், அடுத்த சில தினங்களில் எஞ்சிய பணிகளை முடிக்கப்பட்டு, திட்டம் விரைவில் செயலுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

