ADDED : மார் 19, 2024 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் சம்பந்தப்பட்ட கட்சியினர் போஸ்டர் மற்றும் கட்சி சின்னங்களை அகற்றவில்லை. மறுநாள் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம், அனந்தேரி, சீத்தஞ்சேரி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் கட்சி சின்னங்கள் அழிக்கப்படவில்லை. கொடிக்கம்பங்கள், தலைவர்களின் படங்கள் அப்படியே உள்ளன.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து போந்தவாக்கம் கிராமத்தில் கட்சி சின்னங்கள் அழிக்கும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

