/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் போக்குவரத்திற்கு இடையூறு மின்மாற்றியை மாற்ற கோரிக்கை
/
மீஞ்சூரில் போக்குவரத்திற்கு இடையூறு மின்மாற்றியை மாற்ற கோரிக்கை
மீஞ்சூரில் போக்குவரத்திற்கு இடையூறு மின்மாற்றியை மாற்ற கோரிக்கை
மீஞ்சூரில் போக்குவரத்திற்கு இடையூறு மின்மாற்றியை மாற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 02:37 AM

மீஞ்சூர்:மீஞ்சூரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மீஞ்சூர் பஜாரில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகத்திற்காக, மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
இவை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை மறித்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன், மீஞ்சூர் பஜார் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளின் கூரைகளை அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.
அப்போது வியாபாரிகள் 'மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை மாற்று இடத்தில் வைத்துவிட்டு, வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்' என நெடுஞ்சாலைத்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் மாற்று இடத்தில் பதிக்கப்படாமல், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது தொடர்வதுடன், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை, மின்வாரியத்தினர் மாற்று இடத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.