ADDED : ஆக 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:சென்னையில் துாய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மீஞ்சூரில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போராட்டத்தை கைவிட மறுத்த துாய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று மீஞ்சூர் பகுதி சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.