ADDED : ஜன 07, 2025 07:25 AM

பொன்னேரி :   அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நேற்று, தே.மு.தி.க., சார்பில், பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் கிழக்கு.மாவட்ட செயலர் டில்லி தலைமையில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் தொகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாவது:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும், நியாயமான நீதி வழங்க வேண்டும்.
பெண்களுக்கும், மாணவியருக்கும் நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரண தொகை வழங்கவேண்டும். போதை, கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டது.

