ADDED : மார் 14, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் , 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை, எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று து வக்கி வைத்தார்.
திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் ஊராட்சி, பகத்சிங் நகரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், 80 பயனாளிகளுக்கு புகையில்லா அடுப்பு வழங்கல், தாடூர் கிராமத்தில் மழைநீர் வடிகால்வாய், கோரமங்கலம் தண்டுமேடு, செருக்கனுார் கூட்டுச்சாலை மற்றும் இஸ்லாம் நகர் போன்ற இடங்களில் மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார்.
