UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிபவர் செல்வம், 45. இவர், நேற்று முன்தினம் மதியம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலிலுக்கு, ‘டி.வி.எஸ்., எக்செல்100’ வாகனத்தில் வந்தார்.
கோவிலின் 16 கால் மண்டபம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, சுவாமி தரிசனத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, டூ – வீலர் காணாமல் போனது தெரிந்தது.
இதுகுறித்து, செல்வம் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
