/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புற்றீசல் போல் ஷேர் ஆட்டோக்கள்: முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
/
புற்றீசல் போல் ஷேர் ஆட்டோக்கள்: முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
புற்றீசல் போல் ஷேர் ஆட்டோக்கள்: முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
புற்றீசல் போல் ஷேர் ஆட்டோக்கள்: முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
ADDED : பிப் 02, 2026 05:00 AM

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி சந்திப்பு அமைந்துள்ள புதுரோட்டில், புற்றீசல் போல் பெருகி வரும் ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. போக்குவரத்து நெரிசலை போலீசார் முறைப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் செவ்வாய், ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவர்.
அந்த நாட்களில், சிறுவாபுரியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். இதன் காரணமாக, 3 கி.மீ.,யில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுரோடு சந்திப்பில், இருசக்கர வாகனங்களை தவிர, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
அங்கிருந்து, ஷேர் ஆட்டோ மற்றும் மினி பஸ் மூலமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவர். பக்தர்களை கோவிலுக்கு ஏற்றி செல்வதற்காக, அந்த சந்திப்பில் புற்றீசல் போல் ஷேர் ஆட்டோக்கள் பெருகியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், சிறுவாபுரி கோவில் வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த தவறியதால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இச்சந்திப்பில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் கவரைப்பேட்டை போலீசார், போக்குவரத்து பாதிக்காதபடி ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

