/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ ஸ்டாண்டாக மாறி வரும் வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

ADDED : டிச 26, 2025 06:54 AM

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்தை சுற்றி ஆட் டோக்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
கோவில் அமைந்துள்ள பகுதிக்கு, போதிய பேருந்து வசதி இல்லாததால், இருசக்கரம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பக்தர்கள் வரும் வாகனத்திற்கு இடம் அளிக்காத வகையில், கோவில் வளாகத்தில் ஆட்டோகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர்.
எனவே, கோவில் வளா கத்தை சுற்றி ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.