/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 05, 2026 05:30 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று அதிகளவில் மேல்மருவத்துார் செல்லும் பக்தர்கள் வந்தனர். இதனால் மூலவரை இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் தனுர் மாதம் ஒட்டி நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு தனுர் மாதபூஜை யுடன் மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதிக்க பட்டது.
நேற்று கடும் பனிப்பொழி இருந்த போதிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். குறிப்பாக மேல்மருவத்துார் செல்லும் பக்தர்கள் செவ்வாடை அணிந்து அதிகளவில் வந்ததால் பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், பத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போல், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பொங்கல் வைத்தும், ஆடு, கோழி வழங்கியும், வேப்ப இலை ஆடை அணிந்தும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். அதிகளவு பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
★

