/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சபரிமலை செல்ல விரதமிருந்து மாலை போட குவிந்த பக்தர்கள்
/
சபரிமலை செல்ல விரதமிருந்து மாலை போட குவிந்த பக்தர்கள்
சபரிமலை செல்ல விரதமிருந்து மாலை போட குவிந்த பக்தர்கள்
சபரிமலை செல்ல விரதமிருந்து மாலை போட குவிந்த பக்தர்கள்
ADDED : நவ 18, 2025 03:27 AM

திருத்தணி: கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து கொண்டனர்.
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை, 4:30 மணி முதல் குவிந்தனர்.
சுந்தரவிநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்திய பின், அய்யப்ப பக்தர்கள் நீலநிறம், கருப்புநிற ஆடைகள் அணிந்து, கோவில் குருக்களிடம், சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக, மாலை அணிந்துக் கொண்டனர். நேற்று மட்டும், 600க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் வந்து மாலை அணிந்து சென்றனர் .
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், உள்ள அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் மாலை அணிவதற்காக, அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்களுக்கு, அய்யப்பன் சன்னதியில் குரு சுவாமி ரவி, பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

