/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 27, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:நாட்டின், 75வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், மத்திய, மாநில அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நேற்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

