/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கேதார கவுரி நோன்பு விமரிசை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
/
கேதார கவுரி நோன்பு விமரிசை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கேதார கவுரி நோன்பு விமரிசை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
கேதார கவுரி நோன்பு விமரிசை கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : அக் 21, 2025 11:18 PM

திருத்தணி: சுந்தர விநாயகர் கோவில் மற்றும் அம்மன் கோவில்களில் நடந்த கேதார கவுரி நோன்பை ஒட்டி, திரளான பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளிக்கு மறுநாள் சுமங்கலி பெண்கள் கேதார கவுரி நோன்பு நடைபெறும். மகா கவுரியான அம்பிகை, சிவபெருமானின் முழு அருளைப் பெற, 21 நாட்கள் விரதம் மேற்கொண்டார்.
அதுவே, கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கவுரி நோன்பு என்று அழைக்கப்படுகிறது. நேற்று, தீபாவளி மறுநாள் என்பதால், திருத்தணியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், தணிகாசலம்மன், படவேட்டம்மன், தணிகை மீனாட்சி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களில் நோன்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், உற்சவர் கவுரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பெண் பக்தர்கள், தலா 21 வெற்றிலை, பாக்கு, அதிரசம், வடை மற்றும் பழங்கள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர்.
அதேபோல், திருத்தணி நகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை வாடாவல்லி சமேத விசாலீஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். விநாயகர், அம்மன், சிவன் என, இஷ்ட தெய்வங்களுக்கு நோன்பு இருந்து வழிபாடு நடத்தினர்.
ஊத்துக்கோட்டை சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள மரகதாம்பிகை சன்னிதி, ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில்களில், பக்தர்கள், தலா 21 விபூதி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர்.