சிறுவாபுரி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 21, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை தரிசிக்க, மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் வேண்டுதலை நிறைவேற்ற, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், காலை - மாலை வரை பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால், மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்தனர்.
ஹிந்து அறநிலைய துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், செயல் அலுவலர் மாதவன் தலைமையிலான அத்துறையினர் கோவில் உட்புறத்திலும், ஆரணி போலீசார் கோவிலின் வெளிபுறத்திலும் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.
