/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அருங்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா
/
அருங்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா
அருங்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா
அருங்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா
ADDED : பிப் 22, 2024 01:02 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது அருங்குளம் ஊராட்சி. இங்கு காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன், குடிநீர் செல்லும் பைப்பில் பழுது ஏற்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து, நேற்று காலை 8:30 மணியளவில் சென்னை- - --திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்த கனகம்மாசத்திரம் போலீசார், பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, காலி குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தவர்கள் நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்த பி.டி.ஓ., காளியம்மாள், பழுதை சீரமைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.