தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொதட்டூபேட்டை பணிமனையில் பயன்பாட்டிற்கு வராத டீசல் பங்க்

 பொதட்டூபேட்டை பணிமனையில் பயன்பாட்டிற்கு வராத டீசல் பங்க்

 பொதட்டூபேட்டை பணிமனையில் பயன்பாட்டிற்கு வராத டீசல் பங்க்


ADDED : மார் 22, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதட்டூர்பேட்டை: பேருந்து பணிமனையில் நிறுவப்பட்டுள்ள டீசல் பங்க் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டையில் செயல்பட்டு வரும் பேருந்து பணிமனையில் குறைந்தளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த பணிமனையில் இருந்து தொலைதுார பேருந்துகள் இயக்கப்படாததால், பணிமனை இருந்தும் பயனில்லை என, உள்ளூர் மக்கள் புலம்பி வருகின்றனர்.

பேருந்து பணிமனையில் எரிபொருள் நிரப்பும் வசதி இருந்தால் மட்டுமே தொலைதுார பேருந்துகள் இயக்க முடியும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையில் டீசல் பங்க் அமைக்கும் படி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில், இந்த பேருந்து பணிமனையில் டீசல் நிரப்பும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால், பணிமனையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, பெட்ரோல் பங்கை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us