/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூரில் பாழடைந்த துணை சுகாதார நிலைய கட்டடம்
/
மணவூரில் பாழடைந்த துணை சுகாதார நிலைய கட்டடம்
ADDED : அக் 06, 2024 12:48 AM

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் திருத்தீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது துணை சுகாதார நிலைய கட்டடம். இங்கு 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட இக்கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து திருவாலங்காடு மருத்துவ அலுவலரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக துணை சுகாதார நிலையம், கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அங்கு கர்ப்பிணியர் சிகிச்சை பெறவும் பரிசோதனை செய்து செல்ல போதிய வசதி இன்றி சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
எனவே பாழடைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் வலியுறுத்தி உள்ளனர்.