/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'தினமலர்' செய்தி எதிரொலி தரைப்பால இணைப்பு சாலை சீரமைப்பு
/
'தினமலர்' செய்தி எதிரொலி தரைப்பால இணைப்பு சாலை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி தரைப்பால இணைப்பு சாலை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி தரைப்பால இணைப்பு சாலை சீரமைப்பு
ADDED : பிப் 17, 2025 02:11 AM

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு நகரில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கரலம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சாலையின் குறுக்கே தரைப்பாலங்கள் இரண்டு உள்ளன.
இந்த பாலங்கள் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன. தரைப்பாலங்களுக்கு இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. இணைப்பு சாலையின் அடித்தளம் உறுதியாக கெட்டிப் படுத்தப்படாத நிலையில், தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது.
இதனால், இந்த இணைப்பு சாலை, பாலத்தின் உயரத்தை விட மண்ணில் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த பாலத்தை கடக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்படும் நிலை இருந்து வந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, தரைப்பாலத்தின் இணைப்பு சாலை தார், மற்றும் ஜல்லிகற்கள் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.