/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'தினமலர்' செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டை சாலை 'பேட்ச் ஒர்க்' பணி துவக்கம்

ADDED : பிப் 05, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை, இரண்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால், குண்டும், குழியுமாக உள்ளது.
தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இச்சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஜனப்பன்சத்திரத்தில் குண்டும், குழியுமான சாலையில், 'பேட்ச் ஒர்க்' பணியை துவக்கி உள்ளனர்.