/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை, பொதட்டூர்பேட்டையில் மாற்று திறனாளி கவுன்சிலர்கள் பொறுப்பேற்பு

ADDED : நவ 26, 2025 05:00 AM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பொதட்டூர் பேட்டை பேரூராட்சிகளில் மாற்று திறனாளி நியமன கவுன்சிலர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்று திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு ஏழு மாற்றுத் திறனாளிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் கலைஞர் நகர்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 40 கவுன்சிலராக நியமனம் செய்யப்பட்டார். பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத் முன்னிலையில், பேரூராட்சியின் மாற்று திறனாளி கவுன்சிலராக வெங்கடேசன் உறுதிமொழி வாசித்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதே போல், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின்,மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ரேவதி என்பவர், செயல் அலுவலர் ஹரிஹர கார்த்திகேயன் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.