/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பேரிடர் மீட்பு ஒத்திகை
/
திருத்தணியில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ADDED : அக் 20, 2024 12:53 AM

திருத்தணி:வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு திருத்தணி வருவாய்த்துறையினர் ஏற்பாட்டில் திருத்தணி தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல் திருத்தணி பகுதியில் உள்ள நல்லாங்குளத்தில் நேற்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர்.
இதில் தீயணைப்பு பணியாளர்கள் ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவமழையின்போது நீர்நிரம்பி வரும் சூழலில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றவும் நீரில் அடித்து செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், போலி ஒத்திகை பயிற்சி செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மழை நீரால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு உண்டாகும்போது மக்கள் தங்கள் அன்றாடும் பயன்படுத்தும் வாட்டர் கேன், தண்ணீர் குடம், வாட்டர்பாட்டில், தெர்மாகோல், லாரி ட்யூப் ஆகிய பொருட்களைக் கொண்டு எவ்வாறு தற்காத்துக் கொள்வது என மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் திருத்தணி தாசில்தார் மலர்விழி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி பங்கேற்றனர்.