ADDED : அக் 30, 2026 05:12 PM

திருவூர்: திருவூர் அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
திருவள்ளூர் அடுத்த திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாணவ – மாணவியருக்கு, திருவூர் தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் கால தற்காப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஒத்திகை இன்று (அக்.,30) நடந்தது.
பள்ளி தலைமையாசிரியை மலர்கொடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் லோகநாதன் மேற்பார்வையயில், திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஒத்திகையை நிகழ்தி காட்டினர்.
இதில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, வெள்ள நீரில் இருந்து பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது குறித்து, செயல்முறை விளக்கத்துடன் மாணவ – மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
