/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலையாற்றில் முருகன் சிலை கண்டெடுப்பு
/
கொசஸ்தலையாற்றில் முருகன் சிலை கண்டெடுப்பு
ADDED : மார் 14, 2024 08:11 PM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கொசஸ்தலையாற்றில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆற்று மணலில் முருகன் சிலை இருப்பதாக உள்ளூர்வாசிகளிடம் கூறினர். இதையடுத்து அப்பகுதிவாசிகள் வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையிலான வருவாய் துறையினர் சென்று பார்த்தபோது, ஆற்று மணலுக்குள், 3.5 அடி உயரம், 150 கிலோ எடையிலான முருகன் கற்சிலையை கண்டெடுத்தனர்.
முருகன் சிலை தலையில் மகுடமும், நான்கு கைகளும், இரண்டு கால்களும் உள்ளன. சிலை அமைப்பு கி.பி., 12ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சிலையை மீட்ட திருத்தணி தாசில்தார் மதியழகன் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.

