தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணி பஸ் நிலையத்தில் இடையூறாக தடுப்பு வைப்பு

திருத்தணி பஸ் நிலையத்தில் இடையூறாக தடுப்பு வைப்பு

திருத்தணி பஸ் நிலையத்தில் இடையூறாக தடுப்பு வைப்பு


ADDED : பிப் 20, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்திற்கு, தினமும், 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஒருவழிப் பாதையாக அப்போதைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஏற்படுத்தினார்/

வெளியூர்களில் இருந்து, திருத்தணிக்கு வரும் வாகனங்கள், பேருந்து நிலையத்தில் நுழைந்து, வெளியேறும் வகையில் இரும்பு கம்பிகளால் தடுப்பு ஏற்படுத்தினர்.

அந்த இன்ஸ்பெக்டர், ஒன்றரை ஆண்டுக்கு முன் மாற்றலாகி சென்றதால் போக்குவரத்து இரும்பு தடுப்புகளை முறையாக பராமரிக்காததால், அங்குள்ள கடைக்காரர்கள் தடுப்பு இருந்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என, படிப்படியாக தடுப்புகளை உடைந்து விட்டனர்.

தற்போது, சிறிது துாரம் மட்டும் தடுப்பு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் பழைய தடுப்புகளை அகற்றி புதியதாக தடுப்பு அமைத்து, வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாமல் செல்ல, இரும்பு தடுப்புகள் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us