/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசூர் - மெதுார் இடையே புதிய மின்வழித்தடம் மழைநீர் கால்வாயில் கம்பங்கள் அமைவதால் அதிருப்தி

ADDED : நவ 17, 2025 03:14 AM

பொன்னேரி: புதிய மின்வழித்தடத்திற்காக பதிக்கப்படும் மின்கம்பங்கள், மழைநீர் கால்வாயில் அமைந்திருப்பதால், அரசூர் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த அரசூரில், 110 கி.வாட் துணை மின் நிலையத்தில் இருந்து, மெதுார் துணை மின் நிலையத்திற்கு, கூடுதலாக புதிய மின்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக, அரசூர் - மெதுார் சாலையோரம் மின்கம்பங்கள் பதித்து, அதில் மின்கம்பிகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
இப்பணிகளுக்காக பதிக்கப்படும் மின்கம்பங்கள், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் அமைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், மழைநீர் கால்வாயிலும் பதிக்கப்பட்டிருப்பதால், அதன் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருவதுடன், தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்திற்கு பாதிப்பின்றி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோக துறை திட்டத்தின் கீழ், கூடுதல் மின்வழித்தடத்திற்காக இப்பணிகள் நடைபெறுகிறது. சாலையோரங்களில் குடிநீர் குழாய்கள் உள்ளன. அவை சேதமடைவதை தவிர்க்கவே, அதையொட்டி மின்கம்பம் அமைக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு இல்லாமல் மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் கால்வாயில் உள்ள மின்கம்பம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.