/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டையில் நீர்வரத்து கால்வாய் சீரமைக்காமல் தவிர்ப்பு மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி
/
சின்னம்மாபேட்டையில் நீர்வரத்து கால்வாய் சீரமைக்காமல் தவிர்ப்பு மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி
சின்னம்மாபேட்டையில் நீர்வரத்து கால்வாய் சீரமைக்காமல் தவிர்ப்பு மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி
சின்னம்மாபேட்டையில் நீர்வரத்து கால்வாய் சீரமைக்காமல் தவிர்ப்பு மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி
ADDED : அக் 15, 2025 12:09 AM

திருவாலங்காடு:சின்னம்மாபேட்டையில் மாவட்ட நிர்வாக நிதியில் ஓடைக்கால்வாய் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஓடையில் இருந்து ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்காமல் சென்றதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்துார், திருவாலங்காடு, திருத்தணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில், ஒவ்வொரு மழைக்காலத்திலும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்குகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், வேளாண்மை, வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பு நடத்தி, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் 16 இடங்களை கண்டறிந்துள்ளனர்.
அந்த பகுதிகளில் மழைநீர் வெளியேறும் கால்வாய், துார்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 16 இடங்களில், 133 கி.மீ.,க்கு பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி, கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது.
இதுவரை, 80 கி.மீ.,க்கு கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஓடைக்கால்வாய், 3 கி.மீ., உடையது.
இக்கால்வாயில் செல்லும் தண்ணீர், பழையனுார் ஏரி வழியாக கொசஸ்தலையாற்றில் கலந்து, பூண்டி ஏரியை அடைகிறது.
அதேபோல், சின்னம்மாபேட்டை ஓடையில் இருந்து மற்றொரு கால்வாய் செல்லியம்மன் கோவில் ஏரிக்கு செல்கிறது. இக்கால்வாயை துார்வாரி சீரமைக்காததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைக்காததால், விவசாய நிலங்கள் வெள்ளப் பாதிப்பில் சிக்கும் அபாய நிலை உள்ளதுடன், கால்வாய் துார்ந்து அருகே உள்ள குடியிருப்புகளும் வெள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, கலெக்டர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுத்து, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.