/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் நிலவேம்பு கசாயம் வழங்கல்
/
ஊத்துக்கோட்டையில் நிலவேம்பு கசாயம் வழங்கல்
ADDED : டிச 04, 2024 11:37 PM
ஊத்துக்கோட்டை, வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக தமிழகம் முழுதும் மழை பெய்தது. சில இடங்களில் பெய்த பலத்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின. ஊத்துக்கோட்டை அருகே, ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தற்போது, மழை பெய்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.
பேருந்து நிலையம், பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்டடோருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புரவு மேற்பார்வையாளர் செலபதி தலைமையில் துாய்மை பணியாளர்கள் வாயிலாக பாதசாரிகள், பேருந்து பயணியர்களுக்கு வழங்கினர்.
ஒவ்வொரு நாளும் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.