தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாவட்ட அளவிலான கராத்தே 600 வீரர் – வீராங்கனையர் பங்கேற்பு

மாவட்ட அளவிலான கராத்தே 600 வீரர் – வீராங்கனையர் பங்கேற்பு

மாவட்ட அளவிலான கராத்தே 600 வீரர் – வீராங்கனையர் பங்கேற்பு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருவள்ளூர் மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 600 வீரர் – வீராங்கனையர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது தற்காப்புக் கலை திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில், 29ம் ஆண்டு மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, திருவள்ளூரில் கடந்த இரு நாட்களாக நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறுவர் – சிறுமியர் உட்பட, 600 வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.

இதில், தனித்திறனை வெளிப்படுத்தும் ‘கட்டா’ மற்றும் இருவர் நேருக்கு நேர் மோதும் ‘குமிட்டே’ ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

வயது மற்றும் எடை அடிப்படையில், மொத்தம் 90 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டதால், அரங்கில் வீரர் – வீராங்கனையரின் திறமையான அசைவுகள் மற்றும் தற்காப்பு உத்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனையருக்கு, மாவட்ட கராத்தே சங்க சேர்மன் லட்சுமிகாந்த், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us