ADDED : மார் 05, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட திறன் மையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் 23 திறன் மையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக முதல் தளத்தில், 5.28 கோடி ரூபாய் மதிப்பிலான மாவட்ட திறன் மையத்தை, கலெக்டர் பிரதாப், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

