/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் இடையூறு
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் இடையூறு
ADDED : நவ 22, 2024 01:07 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கிளாய் ஊராட்சி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை வயலுார், உளுந்தை, மும்முடிக்குப்பம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பேருந்துகள், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும் இவ்வழியே தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து, தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் சாலையிலே இளைப்பாறுவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.