ADDED : ஜூன் 09, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 2020ல் மாவட்ட மருத்துவ கல்லுாரியாக மாற்றப்பட்டது. அதே ஆண்டு, திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த, 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின் வசதி இல்லாமல், திருத்தணி மருத்துவமனை இரு மாதங்களாக திறக்கப்படவில்லை. தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகள், புதிதாக துவங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள் கட்டமைப்புகளை, தி.மு.க., அரசு ஏற்படுத்தவில்லை. விளம்பரத்துக்காக உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களின் உயிரோடு விளையாடுகிறது.