டூ - வீலரில் சென்று ஓட்டு சேகரித்த தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி
டூ - வீலரில் சென்று ஓட்டு சேகரித்த தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி
ADDED : ஏப் 09, 2026 07:22 PM

திருத்தணி: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து மக்களிடையே பேசியும், இருசக்கர வாகனங்களில் தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி ஆகியோருடன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி இரு சக்கர வாகனத்தில் சென்று ஓட்டு சேகரித்தார்.
திருத்தணி தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி நேற்று, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி, வி.சி., மாவட்ட செயலர் தண்டபாணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று, முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
மேலும், அத்திமாஞ்சேரிப்பேட்டை, கர்லம்பாக்கம், வடகுப்பம், வெங்கடாபுரம், குமாராஜாபேட்டை ஆகிய ஊராட்சிகளிலும் இரு சக்கர வாகனத்தில் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், மகளிர் இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தேர்தல் அறிக்கையில், 8,000 ரூபாய் கூப்பன், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை அதிகரிக்கப்படும்.
மேலும், முரசு சின்னத்திற்கு ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்தால், திருத்தணி தொகுதி மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது, தி.மு.க.,, - தே.மு.தி.க., - காங்., - வி.சி.., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
