/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் 3 லி., தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை
/
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் 3 லி., தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் 3 லி., தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை
வெயிலால் வெப்ப நோய்கள் பரவல் 3 லி., தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை
ADDED : ஏப் 05, 2025 02:29 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று பகலில், 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது.
இதனால், உடலின் வெப்பம் அதிகரித்து பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு என, பல்வேறு வெப்ப நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தால், வெப்ப நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரகலாதன் கூறியதாவது:
தேவையான அளவு நீர் குடிக்காதது, அதிக வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால், சிறுநீர் கடுப்பு ஏற்படும். இதற்கு, வெயிலில் செல்வதை குறைத்து, நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தினமும் 3 - --4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அவ்வப்போது வியர்வையை துடைத்து, உடலை சுத்தமாக பராமரிக்காவிட்டால் வியர்க்குரு வரும். எனவே, காற்றோட்டமான இடங்களில் இருப்பது நல்லது. மெல்லிய பருத்தியாடைகளை அணியலாம். வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவாக கெட்டுவிடும்.
அவற்றில், நோய் கிருமிகள் அதிகளவில் பெருகும். இந்த உணவை தவிர்ப்பதன் வாயிலாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து தப்பலாம்.
முடிந்தவரை ஒவ்வொரு வேளைக்கு ஏற்றாற்போல், சமைத்த உணவை உடனுக்குடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நீராகாரங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. குறிப்பாக, இளநீர், பழச்சாறு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் உட்கொள்ள வேண்டும்.
மதிய வேளையில் வெயில் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, குடையை பயன்படுத்துவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

