தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பழவேற்காட்டில் இறந்து கரை ஒதுங்கிய 'டால்பின்'

பழவேற்காட்டில் இறந்து கரை ஒதுங்கிய 'டால்பின்'

பழவேற்காட்டில் இறந்து கரை ஒதுங்கிய 'டால்பின்'


ADDED : பிப் 17, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழவேற்காடு, பழவேற்காடு, கூனங்குப்பம் கிராமத்தின் கடற்கரை பகுதியில் ஆழ்கடல் உயிரினமான 'டால்பின்' ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் வந்தது.

பழவேற்காடு வனத்துறை அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இறந்த, டால்பின், 5 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருப்பதை கண்டனர்.

டால்பின் இறந்து, அழுகிய நிலையில் இருந்ததால், ஆய்வுப்பணிகள் முடிந்தபின், அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

இது குறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது:

டால்பின், கடல் ஆமைகள் ஆழ்கடலில் இருப்பவை. அவை எப்போதாவது கடற்கரை பகுதிக்கு வந்து செல்லும். அச்சமயங்களில் கடற்கரைக்கு வெகு அருகில் அதிக திறன்கொண்ட விசைப்படகுகள் சுற்றும்போது, அதில் சிக்கி உயிரிழக்கின்றன.

சமீப காலமாக, வெளிமாநில விசைப்படகுகள் கடற்கரை அருகிலேயே மீன்பிடி தொழில் செய்கின்றன. அவற்றை கண்காணித்தால், கடல் ஆமை மற்றும் டால்பின் உயிரிழப்பதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us