sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டு பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

/

வீட்டு பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

வீட்டு பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

வீட்டு பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : ஜன 31, 2025 09:08 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழ்நாடு வீட்டு பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை மறுநாள் துவங்குகிறது.

பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட, 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது.

நல வாரியங்களில் உறுப்பினராக சேர, https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர, https://tnuwwb.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தோருக்கு, இரண்டு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்.

இதற்காக, பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வரும் 3 - 5ம் தேதி வரை, மூன்று நாட்கள் சிறப்பு முகாம், காலை 10:00 - மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது.

ஆதார், ரேஷன் கார்டு, பிறந்த தேதி ஆவணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வரலாம்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2797 2221, 2957 0497 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us