/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரதட்சணை கொடுமை? இளம்பெண் தற்கொலை !
/
வரதட்சணை கொடுமை? இளம்பெண் தற்கொலை !
ADDED : ஜூலை 14, 2025 01:51 AM
பூந்தமல்லி,:காட்டுப்பாக்கத்தில், வரதட்சணை கொடுமையால் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் குமுதா, 27. தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது, அங்கு பணிபுரிந்த பெங்களூருவைச் சேர்ந்த அஜித்குமார், 30, என்பவரை காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
நேற்று முன்தினம், வீட்டில் குழந்தையுடன் இருந்த குமுதா, மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில், அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, குமுதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. பூந்தமல்லி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
திருமணம் ஆன நாள் முதல், அஜித்குமார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், குமுதா ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.
வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.