/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய நால்வர் கைது
/
பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய நால்வர் கைது
பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய நால்வர் கைது
பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய நால்வர் கைது
ADDED : நவ 22, 2024 01:13 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, புதுச்சேரி அருந்ததியினர் காலனியில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி பொன்னியம்மாள், 45. கடந்த, 10ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் வீடு திரும்பினர்.
மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து 12 சவரன் நகை, 450 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதேபோல், ஸ்ரீராமகுப்பம், மாகரல் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் 8 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடு போனது.
இதுகுறித்த புகாரின்படி ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் தனிப்படை போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.
புதுச்சேரி, மாகரல், ஸ்ரீராமகுப்பம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகளின் ஆய்வில், போலீசுக்கு அதிர்ச்சியான காட்சி தெரிந்தது. இந்த திருட்டில் மூன்று ஆண்கள், ஒரு பெண் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஒரு கிராமங்களுக்கு சென்று பூட்டிய வீட்டை நோட்டமிடுகின்றனர்.
பின் பூனை பிடிப்பது போல், ஆண்கள் வலை எடுத்து கொண்டு திருட செல்லும் வீட்டின் அருகே செல்கின்றனர். பெண் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், நகையை திருடி செல்வது தெரிந்தது.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணன், 26, அஜித், 21 காளஹஸ்தியை சேர்ந்த சத்யராஜ், 35, அவரது மனைவி பிரமிளா, 30 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 சவரன் நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.