தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திரவுபதியம்மன் திருக்கல்யாணம்

திரவுபதியம்மன் திருக்கல்யாணம்

திரவுபதியம்மன் திருக்கல்யாணம்


ADDED : மே 03, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2025 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

கடந்த 1ம் தேதி பகாசூரன் கும்பம் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் இரவு 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று காலை கோவில் வளாகத்தில் திரவுபதியம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில், பெண் சார்பாக திரளான பக்தர்கள், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வீதியுலா வந்தனர். காலை 11:00 மணியளவில் திருக்கல்யாணம் நடந்தது.

வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும்.

ஆர்.கே.பேட்டையில் நடந்து வரும் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us